மராட்டியத்தில் ஊரடங்கு அக்.31 ஆம் தேதி வரை நீட்டிப்பு

நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ள மராட்டியத்தில் ஊரடங்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-09-30 16:28 GMT
மும்பை,

நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ள மராட்டியத்தில் ஊரடங்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  எனினும், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கூடுதல்
 தளர்வுகளையும் மராட்டிய அரசு அறிவித்துள்ளது. 

அதன்படி, ஓட்டல்கள், உணவு விடுதிகள், பார்கள் ஆகியவை 5 ஆம் தேதி முதல் 50 சதவிகித பணியாளர்களுடன் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புற நகர் ரெயில்கள் கூடுதலாக இயக்கப்படும். பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதியில்லை. நீச்சல் குளங்கள்,பொழுது போக்கு பூங்காக்கள், தியேட்டர்கள் திறக்க அனுமதியில்லை” எனவும் மராட்டிய அரசு தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்