கொரோனா; குணமடைந்தோர் எண்ணிக்கை மே மாதம்-50 ஆயிரம், அக்டோபர்-57 லட்சம்

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை கடந்த மே மாதம் 50 ஆயிரத்தில் இருந்து அக்டோபரில் 57 லட்சம் என்ற அளவிற்கு பன்மடங்காக உயர்ந்து உள்ளது.

Update: 2020-10-08 05:44 GMT
புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்து வருகிறது.  இதுபற்றி மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியொன்றில், இந்தியாவில் கடந்த மே மாதம் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரம் என்ற அளவில் இருந்தது.

எனினும், இந்த எண்ணிக்கை அக்டோபரில் 57 லட்சம் என்ற அளவிற்கு பன்மடங்காக உயர்ந்து உள்ளது.  நாளொன்றுக்கு 75 ஆயிரம் பேர் குணமடைந்து வருகின்றனர்.  சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை விட இது 6.3 மடங்கு அதிகம் ஆகும் என்று தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 78,524 பேருக்கு புதிய பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.  மொத்தம் 58 லட்சத்து 27 ஆயிரத்து 705 பேர் இதுவரை குணமடைந்து சென்றுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கின்றது.

மேலும் செய்திகள்