மேற்குவங்காளத்தில் பா.ஜனதா கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மேற்குவங்காளத்தில் பல இடங்களில் பேரணி சென்ற பா.ஜனதா கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

Update: 2020-10-08 10:56 GMT
கொல்கத்தா

மேற்கு வங்கத்தில் தங்களது பா.ஜனதா கட்சி தொண்டர்கள் கொல்லப்படுவதாக கூறி, கொல்கத்தாவில், முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் அலுவலகத்தை நோக்கி பாஜனதா கட்சியினர் நடத்திய பேரணியில் கலவரம் வெடித்தது. 

நபான்னா சலோ என்ற இந்த பேரணியில் கொல்கத்தாவின் பல இடங்களில் பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தடைகளை மீறி பேரணியாக செல்ல முயன்ற பாஜனதா கட்சியினர் மீது தடியடியும், தண்ணீரும் பீய்ச்சியும் போலீசார் கலைத்தனர்.

ஜனநாயக முறையில் பேரணியாக சென்ற தங்கள் மீது மம்தா அரசு அடக்குமுறைய கட்டவிழ்த்து விட்டதாக பாஜக தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குண்டர்களும் போலீசாரும் சேர்ந்து தங்கள் மீது கல் எறிந்ததாக பாஜக நிர்வாகி கைலாஷ் விஜயவர்கியா கண்டனம் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்