தைவானின் தேசிய தின விளம்பரம் இந்திய ஊடகங்களுக்கு சீனா மிரட்டல் ; தைவான் கண்டனம்

தைவானின் தேசிய தின விளம்பரம் வெளியிட்ட இந்திய ஊடகங்களுக்கு சீனா அதிருப்திதெரிவித்து உள்ளது இதற்கு தைவான் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

Update: 2020-10-08 11:39 GMT
புதுடெல்லி

சர்ச்சைக்குரிய இமயமலை எல்லையில் இந்திய மற்றும் சீன ராணுவங்களுக்கு இடையே பயங்கர மோதல்கள் ஏற்பட்ட சில மாதங்களிலேயே, சீனா மீதான  விரோதமும் சந்தேகமும் நிறைந்திருக்கும் இந்த நேரத்தில் புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது.

சனிக்கிழமையன்று ஜனநாயக, சீன உரிமை கோரப்பட்ட தீவான தைவானின் தேசிய தினத்தை குறிக்கும் வகையில் தைவான் அரசாங்கத்தால் முன்னணி இந்திய செய்தித்தாள்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன.

தைவானின் தேசிய தினத்திற்கான செய்தித்தாள்கள் விளம்பரங்களை வெளியிட்டதை அடுத்து, ஒரே சீனா கொள்கையை கடைபிடிக்குமாறு புதுடில்லியில் உள்ள தூதரகம் பத்திரிகையாளர்களுக்கு அறிவுறுத்தியது. அடுத்து, இந்தியாவில் தணிக்கை முறையை  விதிக்க முயற்சித்ததாக சீனா குற்றம் சாட்டி உள்ளது.

இந்த விளம்பரம் தைவான் ஜனாதிபதி சாய் இங்-வெனின் புகைப்படத்துடன்  சக ஜனநாயக நாடான இந்தியாவை தைவானின் இயற்கையான பங்காளியாகப் பாராட்டியது.

தைவானை தனது மாகாணமாகக் கருதும் சீனா, புதன்கிழமை இரவு தனது தூதரகம் அனுப்பிய மின்னஞ்சலில், ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

உலகில் ஒரே ஒரு சீனா மட்டுமே உள்ளது என்பதை நமது ஊடக நண்பர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறது, மேலும் சீன மக்கள் குடியரசின் அரசாங்கமே ஒரே முறையான அரசாங்கமாகும் முழு சீனாவையும் குறிக்கும் என்று  தூதரகம் கூறி உள்ளது.

தைவான் வெளியுறவு மந்திரி ஜோசப் வு சீனாவிற்கு ஊடகங்களுக்கு வழங்கிய ஆலோசனையை கேலி செய்தார்.

"இந்தியா ஒரு துடிப்பான பத்திரிகை மற்றும் சுதந்திரத்தை விரும்பும் மக்களைக் கொண்ட பூமியில் மிகப்பெரிய ஜனநாயக நாடு. ஆனால் கம்யூனிஸ்ட் சீனா தணிக்கை விதிக்கும் நாடு என கூறி உள்ளார்.

இந்தியாவுக்கு தைவானுடன் முறையான இராஜதந்திர உறவுகள் இல்லை, ஆனால் இரு தரப்பினருக்கும் நெருக்கமான வணிக மற்றும் கலாச்சார உறவுகள் உள்ளன.

மேலும் செய்திகள்