ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் - வழக்குப்பதிவு செய்தது சிபிஐ

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

Update: 2020-10-11 14:58 GMT
லக்னோ,

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்தரஸ் நகரைச் சேர்ந்த பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கடந்த மாதம் 14-ம் தேதி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்தப் பெண் சிகிச்சைக்காக டெல்லி சப்தார் ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இதையடுத்து, அந்தப் பெண்ணின் உடலை வலுக்கட்டாயமாக ஹாத்தரஸுக்கு இரவோடு இரவாகக் கொண்டு வந்த போலீசார், பெற்றோரின் அனுமதியின்றி அதிகாலை தகனம் செய்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த கொடூரமான சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பெரிய போராட்டங்கள் வெடித்தன.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ மேற்கொள்ள உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந்துரை செய்தார். இதையடுத்து, இந்த வழக்கை சிபிஐ விசாரனைக்கு ஏற்றுக்கொண்டது. 

இந்த நிலையில், ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக இன்று காலை முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்துள்ளது. கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  இது தொடர்பான விசாரணையை சிபிஐ அதிகாரிகள் விரைவில் தொடங்க உள்ளனர்.  

மேலும் செய்திகள்