மராட்டியத்தில் மேலும் 7,089-பேருக்கு கொரோனா தொற்று

மராட்டியத்தில் மேலும் 7,089-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-10-12 15:14 GMT
மும்பை,

மராட்டியத்தில் மேலும் 7,089-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல்,  இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று பதிப்பால் 165-பேர் உயிரிழந்துள்ளனர். 

மராட்டியத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை  15,35,315-ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா தொற்று பாதிப்பால் அம்மாநிலத்தில்   40,514 - பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2,12,439- ஆக உள்ளது. 

மேலும் செய்திகள்