மாமியார் கொடுமை: சட்டசபை கட்டிடம் முன் பெண் தீக்குளிப்பு; லவ் ஜிகாத் பா.ஜனதா குற்றச்சாட்டு

மாமியார் கொடுமையால் லக்னோ சட்டசபை கட்டிடம் முன் பெண் தீக்குளித்தார். லவ் ஜிகாத் பா.ஜனதா குற்றச்சாட்டி உள்ளது.

Update: 2020-10-14 08:37 GMT
லக்னோ

உத்தரபிரதேசம் லக்னோவில்  உள்ள மகாராஜ்கஞ்ச் சேர்ந்த 36 பெண் அகிலேஷ் திவாரி என்பவரை முதலில் திருமணம் செய்து இருந்தார். அவரிடம் விவாகரத்து பெற்ற பிறகு  ஆசிப் என்ற இளைஞரை திருமணம் செய்து கொண்டார்.  திருமணத்திற்குப் பிறகு, ஆசிப் சவுதி அரேபியா சென்று விட்டார். ஆனால் அந்த பெண்ணை தற்போது மாமியார் வீட்டிற்குள் அனுமதிப்பது இல்லை.

இந்த நிலையில்  பாதிக்கப்பட்ட பெண்  லக்னோவில் உள்ள உத்தரபிரதேச சட்டசபை கட்டிடத்தின் முன் அந்த பெண் தீக்குளித்தார்.உடனடியாக அங்கு காவலுக்கு நின்ற போலீசார் அவரை காப்பாற்றினர்.  போலீசார் அவரை சிவில் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஹஸ்ராத்கஞ்ச் போலீஸ் நிலையத்திற்குட்பட்டது என கூறப்படுகிறது.

இதனை பா.ஜனதா லவ் ஜிகாத் என குற்றம்சாட்டி உள்ளது.

மேலும் செய்திகள்