காங்கிரசில் மாமியார், மருமகன்கள் சண்டைகள் நடந்து வருகின்றன; ஜே.பி. நட்டா பேச்சு

நமக்கு பா.ஜ.க. குடும்பம் என்றும் ஆனால் சிலருக்கு, குடும்பமே கட்சியாக உருமாறி உள்ளது என்றும் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.

Update: 2020-10-17 09:02 GMT
டேராடூன்,

உத்தரகாண்டில் பா.ஜ.க. கட்சி அலுவலக பூமி பூஜை மற்றும் அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது.  இதில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன்பின் தொண்டர்கள் முன்னிலையில் நட்டா பேசும்பொழுது, அரசியல்வாதி ஒருவரின் இல்லத்தில் இருந்து ஒரு கட்சியின் அலுவலகம் இயங்குகிறது என்றால், அந்த கட்சி அவருக்கு உரியது என அர்த்தம்.  பிற கட்சிகளை எடுத்து கொண்டால், குடும்பமே கட்சியாக உருமாறி இருக்கிறது.

நம்மை எடுத்து கொண்டால் கட்சியானது நம்முடைய குடும்பம் ஆகியுள்ளது.  காங்கிரஸ் அல்லது பிற கட்சிகளாகட்டும், அவர்கள் தங்களது சகோதர, சகோதரிகளையும், தாய் மற்றும் மகன்களையும் காப்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்குள்ளேயே மாமியார், மருமகன்கள் சண்டைகள் நடந்து வருகின்றன என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்