தெலுங்கானாவில் 5 பேர் கொண்ட மத்திய குழு வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்கிறது

தெலுங்கானாவில் 5 பேர் கொண்ட மத்திய குழு வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்கிறது.

Update: 2020-10-21 18:46 GMT
புதுடெல்லி, 

தெலுங்கானாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த வாரம் கன மழை கொட்டி தீர்த்தது.

இதனால் தலைநகர் ஐதராபாத் உள்பட பல இடங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்த விபத்தில் பலர் பலியாகினர். மேலும், மழை காரணமாக ரூ.5,000 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டதாக மாநில அரசு தெரிவிந்துள்ளது.

இந்த நிலையில் தெலுங்கானாவில் மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்வதற்காக 5 பேரைக் கொண்ட மத்திய குழு இன்று (வியாழக்கிழமை) தெலுங்கானா வருகிறது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் தலைமையிலான இந்த குழு இன்றும், நாளையும் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்