இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 89.20 சதவீதமாக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 89.20 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Update: 2020-10-22 19:25 GMT
புதுடெல்லி,

இது குறித்து, மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த, 24 மணி நேரத்தில், கொரோனா வைரசால், 55 ஆயிரத்து, 839 பேர் பாதிக்கப்பட்டனர்.இதையடுத்து, வைரசால் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை, 77 லட்சத்து, 6,946 ஆக உயர்ந்துள்ளது.இதில், ஏழு லட்சத்து, 15 ஆயிரத்து, 812 பேர், சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம், 9.29 சதவீதமாக உள்ளது.

கடந்த ஒரே நாளில், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து, 79 ஆயிரத்து, 415 பேர் .குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை, 68 லட்சத்து, 74 ஆயிரத்து, 518 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைந்தோர் விகிதம், 89.20 சதவீதமாக அதிகரித்துள்ளது.நேற்று ஒரே நாளில், கொரோனா வைரசால், 702 பேர் உயிரிழந்தனர். இதில், அதிகபட்சமாக, மஹாராஷ்டிராவில், 180 , கர்நாடகாவில், 88, மேற்கு வங்கத்தில், 64; டெல்லியில், 47; சத்தீஸ்கரில், 44; உத்தர பிரதேசத்தில், 41; தமிழகத்தில், 39 பேரும் உயிரிழந்தனர். மொத்த பலி எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 16 ஆயிரத்து, 616 ஆக உயர்ந்து உள்ளது. எனினும், இறப்பு விகிதம், 1.51 சதவீதமாக குறைந்துள்ளது. உயிரிழந்தோரில், 70 சதவீதம் பேர், வேறு சில நோய்களால் பாதிக்கப்பட்டோர் ஆவர்.

கடந்த ஒரே நாளில், 14.69 லட்சம் பேருக்கு, கொரோனாவுக்கான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை, 9.86 கோடி பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்