மராட்டியத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் 4-வது முறையாக குறைப்பு

மராட்டியத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் 4-வது முறையாக குறைக்கப்பட்டு இருப்பதாக மந்திரி ராஜேஷ் தோபே கூறினார்.

Update: 2020-10-27 04:06 GMT
மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் ஆரம்பத்தில ரூ.4 ஆயிரத்து 500 ஆக இருந்தது. இந்த கட்டணத்தை படிப்படியாக குறைத்து அரசு நிர்ணயித்து வருகிறது.

இந்தநிலையில் மராட்டியத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் 4-வது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநில சுகாதார மந்திரி ராஜேஷ் தோபே வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மராட்டியத்தில் கொரோனா பரிசோதனை கட்டணத்தை 4-வது முறையாக குறைத்து நிர்ணயம் செய்து உள்ளோம். அதன்படி இனி ஆய்வகங்களில் தொற்று நோய்க்கான பரிசோதனை செய்ய ரூ.900 வசூலிக்க வேண்டும்.

கொரோனா சிகிச்சை மையங்கள், ஆஸ்பத்திரிகள், தனிமை மையங்களில் பரிசோதனை செய்து கொள்ள கட்டணமாக ரூ.1,400 வசூலிக்கப்படும். வீட்டில் சென்று மாதிரியை சேகரித்து பரிசோதனை செய்ய கட்டணமாக ரூ.1,800 வசூலித்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்