பாஜகவை தோற்கடிக்க முடியாது என யார் சொன்னது? ப.சிதம்பரம்

பாஜகவை பீகார் சட்டமன்ற தேர்தலில் தோற்கடிக்க முடியும் என நம்புவதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Update: 2020-11-01 13:02 GMT
புதுடெல்லி,

பீகார் சட்டமன்ற தேர்தலையொட்டி அனல் பறக்கும் பிரசாரத்தில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக ராகுல் காந்தியும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க முடியும் என எதிர்க்கட்சிகள் நம்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  தனது டுவிட்டர் பக்கத்தில் ப.சிதம்பரம் கூறியிருப்பதாவது:-'

2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜக வேட்பாளர்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 381 இடங்களில் 319 இடங்களில் வெற்றி பெற்றார்கள். அதற்குப் பிறகு 330 இடங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களிலும், 51 இடங்களில் நடைபெற்ற இடைதேர்தல்களிலும் பாஜக வேட்பாளர்கள் மொத்தமுள்ள இடங்களில் 163 மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்கள்.

பாஜகவைத் தோற்கடிக்க முடியாது என்று யார் சொன்னது? முடியும் என்று எதிர்கட்சிகள் நம்ப வேண்டும். இது பிகாரில் நடக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்