மோடியின் வாக்கு இயந்திரத்தை கண்டு அஞ்ச மாட்டோம்: ராகுல் காந்தி பாய்ச்சல்

மோடியின் வாக்கு இயந்திரத்தை கண்டு அஞ்சமாட்டோம் என்று ராகுல் காந்தி விமர்சித்தார்.

Update: 2020-11-04 10:28 GMT
பாட்னா,

பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்ட தேர்தல், கடந்த மாதம் 28-ந் தேதி நடந்தது. 55 சதவீத ஓட்டுகள் பதிவானது. இந்தநிலையில், நேற்று 2-ம் கட்ட தேர்தல், 94 தொகுதிகளில் நடந்தது.  2 ஆம் கட்ட சட்டமன்ற தேர்தலில் 53.51 சதவித வாக்குகள் பதிவாகியுள்ளன. 

வரும் 7 ஆம் தேதி 78 தொகுதிகளுக்கு 3-ஆம் கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. மூன்றாம் கட்ட தேர்தலுக்காக அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். 

அந்த வகையில், பீகாரின் அராரியா பகுதியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:  மோடியின் வாக்கு இயந்திரத்தை கண்டு அச்சப்பட மாட்டோம்.  மோடியின் ஊடகங்கள் குறித்தும் எங்களுக்கு எந்த அச்சமும் கிடையாது.  

இளைஞர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். எனவே, இந்த முறை இவிஎம் ஆக இருந்தாலும் சரி எம்விஎம் (மோடி வோட்டிங் மெஷின்)  ஆக இருந்தாலும் சரி எங்கள் கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெறும்” என்றார். 

மேலும் செய்திகள்