ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை காப்பாற்ற மாற்றுக் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு பணம்? பா.ஜனதா வீடியோவால் சர்ச்சை

எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க குதிரை பேரம் நடைபெற்றதா என முதல்-மந்திரி அசோக் கெலாட் விளக்கம் அளிக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

Update: 2020-11-29 01:00 GMT
அசோக் கெலாட்
ஜெய்ப்பூர், 

ராஜஸ்தான் மாநில பாரதீய ஜனதா தலைவர் சதீஷ் பூனியா ஒரு வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டார்.

அதில், ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகேந்திரஜீத் சிங் மாளவியா, பாரதீய பழங்குடியின மக்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கு ரூ.10 கோடி கொடுத்ததாக குற்றம் சாட்டுகிறார். ராம்பிரசாத் திண்டார், ராஜ்குமார் ரோட் ஆகிய அந்த இரு எம்.எல்.ஏ.க்களும் தலா ரூ.5 கோடி பெற்றதாக மகேந்திரஜீத் சிங் கூறுகிறார்.

கடந்த ஜூலை மாதம், ராஜஸ்தானில் முன்னாள் துணை முதல்-மந்திரி சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கியதால் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அப்போதும், ஜூன் மாதம் மாநிலங்களவை தேர்தலின்போதும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டனர். அந்த இரு சந்தர்ப்பங்களிலும் காங்கிரஸ் அரசுக்கு பழங்குடியின மக்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்தனர். அதற்காகவே அவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகேந்திரஜீத் சிங் கூறுகிறார்.

இந்த வீடியோவை வெளியிட்டுள்ள பா.ஜனதா தலைவர் சதீஷ் பூனியா, எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க குதிரை பேரம் நடைபெற்றதா என முதல்-மந்திரி அசோக் கெலாட் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க குதிரை பேரம் நடைபெற்றதா என முதல்-மந்திரி அசோக் கெலாட் விளக்கம் அளிக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்