பழங்குடியினர், பட்டியலினக் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்கக் கூடாது என்பதே பாஜகவின் கண்ணோட்டமாக உள்ளது: ராகுல் காந்தி

பழங்குடியினர், பட்டியலினக் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்கக் கூடாது என்பதே பாஜகவின் கண்ணோட்டமாக உள்ளது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Update: 2020-11-29 08:30 GMT

புதுடெல்லி,

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:-  

'பழங்குடியினர், பட்டியலினத்தவர்களுக்கு கல்வி கிடைக்கக் கூடாது என்பதே பாஜக - ஆர்எஸ்எஸ் இந்தியாவின் கண்ணோட்டமாக உள்ளது. பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை நிறுத்துவதே அவர்களின் வழிமுறைகளை நியாயப்படுத்தும் முடிவாகும்?' எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வந்த நிலையில், அதில் மத்திய அரசு தனது பங்கை மட்டும் நிறுத்திவிட்டதாகச் செய்தி வெளியானது. இதையடுத்து, ராகுல் காந்தி மேற்கண்டவாறு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்