இந்தியாவில் கொரோனா பாதிப்பு; 94.62 லட்சம் கடந்தது

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புகளால் 482 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Update: 2020-12-01 05:51 GMT
புதுடெல்லி,

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்காவுக்கு அடுத்த  இடத்தில் உள்ள இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 31 ஆயிரத்து 118 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  இது நேற்றைய (38,772), நேற்று முன்தினம் (41,810) எண்ணிக்கையை காட்டிலும் மிக குறைவாகும்.

இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94 லட்சத்து 62 ஆயிரத்து 810 ஆக உயர்வடைந்து உள்ளது.  இதேபோன்று கடந்த 24 மணிநேரத்தில் 482 பேர் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்து உள்ளனர்.  நேற்று இந்த எண்ணிக்கை 443 ஆக இருந்தது.  இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்து உள்ளது.

இதனால் நாட்டில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை நேற்றைய எண்ணிக்கையான 1 லட்சத்து 37 ஆயிரத்து 139ல் இருந்து 1 லட்சத்து 37 ஆயிரத்து 621 ஆக இன்று உயர்ந்து உள்ளது.  எனினும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்றைய 4 லட்சத்து 46 ஆயிரத்து 952ல் இருந்து 4 லட்சத்து 35 ஆயிரத்து 603 ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 45 ஆயிரத்து 333 பேர் சிகிச்சை பெற்று தொற்றில் இருந்து குணமடைந்து சென்றுள்ளனர்.  இதனால், சிகிச்சை பெற்று குணமடைந்து சென்றவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் இதுவரை 88 லட்சத்து 89 ஆயிரத்து 585 ஆக உயர்ந்து உள்ளது.

மேலும் செய்திகள்