பத்ம விபூஷண் விருது பெறும் அளவுக்கு சமூகத்திற்கு பாதல் செய்த தியாகம் என்ன? பஞ்சாப் முதல் மந்திரி கேள்வி

பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி பிரகாஷ் சிங் பாதலுக்கு கடந்த 2015ம் ஆண்டு மார்ச்சில் நாட்டின் மிக உயரிய பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. இந்த சூழலில் விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து பல நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Update: 2020-12-04 22:11 GMT
சண்டிகர்,

பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி பிரகாஷ் சிங் பாதலுக்கு கடந்த 2015ம் ஆண்டு மார்ச்சில் நாட்டின் மிக உயரிய பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.  இந்த சூழலில் விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து பல நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகள் சங்க தலைவர்களுடனான அரசின் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை.  அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதத்தில் பாதல், தனக்கு வழங்கியிருந்த பத்ம விபூஷண் விருதினை அரசுக்கு திருப்பி அனுப்பினார்.

இதுபற்றி, பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங் கூறும்பொழுது, பிரகாஷ் சிங் பாதலுக்கு ஏன் பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது என்பதே எனக்கு முதலில் தெரியவில்லை.

அவர் எதற்காக போராடினார்?  அல்லது சமூகத்திற்கு அவர் செய்த தியாகம் என்ன?  என கேள்வி எழுப்பியுள்ளார்.  இந்த விவகாரத்தில் அரசியல் செய்வது நிறுத்தப்பட வேண்டும்.  இதுபோன்று படம் போடுவது என்பது 40 ஆண்டுகளுக்கு முன் எடுபட்டது.  ஆனால் தற்பொழுது அது எடுபடாது என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்