குளிர்கால கூட்டத் தொடர் ரத்து: நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அழிவு - காங்கிரஸ் கண்டனம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ரத்து செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் இது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அழிவு என கண்டனம் தெரிவித்து உள்ளது.

Update: 2020-12-16 01:44 GMT
புதுடெல்லி: 

கொரோனா தொற்றுநோய்  பரவலை காரணம் காட்டி  நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறாது என்று  மத்திய அரசு கூறி உள்ளது. டிசம்பர் 14 ஆம் தேதி மக்களவை  காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு  நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி  எழுதிய கடிதத்தில் இதனை தெரிவித்து உள்ளார்.

இது  எதிர்க்கட்சிகளிடம் விமர்சனங்களை எழுப்பி உள்ளது.  காங்கிரஸ்  இது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அழிவு" என்றும் தங்களை  கலந்தாலோசிக்கவில்லை என்றும் கூறி உள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்  கூறும் போது இது குறித்து   தங்களுடன் கலந்து ஆலோசிக்கப்படவில்லை என்று கூறினார்.

காங்கிரஸின் தலைமை கொறடா ஜெய்ராம் ரமேஷ் செய்துள்ள டுவிட்டில்  “மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருடன்  ஆலோசிக்கப்படவில்லை. பிரல்ஹாத் ஜோஷி வழக்கம் போல்  உண்மையில் இருந்து விலகி உள்ளார் என கூறினார்.

காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சசி தரூர் கூறும் போது "வீட்டிலிருந்து பாராளுமன்றம்" சாத்தியமில்லை என்பதற்கு இப்போது ஒரு நல்ல காரணத்தைக் கூறுங்கள்? 543 எம்.பி.க்களை இணைக்க முடியாத அளவுக்கு தகவல் தொடர்பில்  நாம் மிகவும் பின்தங்கியிருக்கிறோமா?  என கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா இது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அழிவு என கூறி உள்ளார்.

சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி கூறுகையில்,

 தேர்தல்கள் நடக்கலாம், தேர்தல் பேரணிகள் நடக்கலாம், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படலாம், கல்லூரி தேர்வுகளை நடத்தலாம், ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் திறக்கப்படலாம், உடற்பயிற்சி மையங்களும் கூட  ஆனால் இந்திய அரசால்  மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படும் ஒரே இடம் அதன் நாடாளுமன்றம், எனவே எந்த அமர்வும் இல்லை.  என கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்