உள்கட்டமைப்பு திட்ட வழக்குகளுக்காக தனி கோர்ட்டுகள் அமைக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

உள்கட்டமைப்பு திட்ட வழக்குகளுக்காக தனி கோர்ட்டுகள் அமைக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

Update: 2020-12-20 19:52 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டு, சிறப்பு நிவாரண சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. உள்கட்டமைப்பு திட்ட ஒப்பந்தங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி கோர்ட்டுகள் அமைக்க இந்த சட்ட திருத்தம் வழிவகுக்கிறது.

இந்த நிலையில், அனைத்து ஐகோர்ட்டுகளின் பதிவாளர்களுக்கு மத்திய சட்ட அமைச்சக செயலாளர் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

உள்கட்டமைப்பு திட்ட ஒப்பந்தங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க அனைத்து மாநிலங்களும் தனி கோர்ட்டு அமைக்க வேண்டும். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிவில் கோர்ட்டுகளை இதற்கென ஒதுக்கலாம்.

அந்த கோர்ட்டுகளில் இத்தகைய வழக்குகளை விசாரிக்க வாரத்தில் சிறப்பு நாட்களை நிர்ணயிக்கலாம். அதன் மூலம் வழக்குகளில் தேவையற்ற தாமதத்தை தவிர்க்கலாம். முதலீட்டாளர்களின் நம்பிக்கையும் அதிகரிக்கும். எளிதாக வர்த்தகம் செய்ய உகந்த மாநிலங்கள், நாடுகள் தரவரிசையில் முதலிடத்தை பெற முடியும்” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்