மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. – திரிணாமுல் காங்கிரசார் மோதல்; பலர் படுகாயம்

மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. – திரிணாமுல் காங்கிரசார் இடையே மோதல் ஏற்பட்டது இதில் பலர் படுகாயம் அடைந்தனர்

Update: 2020-12-23 13:29 GMT

கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாரதீய ஜனதா கட்சிக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் மேற்கு வங்காளம் சென்ற பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் வாகனம் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் புர்பா மெதினிபூர் மாவட்டம் ராம்நகர் சாலையில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகம் அருகே பா.ஜ.க. தொண்டர்கள்  சென்றனர். அப்போது திரிணாமுல் காங்கிரசினர் சிலருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதலாக வெடித்தது. ஒரு கட்டத்தில் இருதரப்பினரும் தாக்கிக்கொண்டதில் பலர் படுகாயம் அடைந்தனர். உடனே போலீசார் இருதரப்பினரையும் விலக்கி விட்டதால் பிரச்சினை முடிவுக்கு வந்தது.

பா.ஜ.க.வினர் தங்கள் கட்சி அலுவலகத்தை இடிக்க முயன்றதாக திரிணாமுல் காங்கிரசார் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் இதனை பா.ஜ.க.வினர் மறுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்