கார்ப்பரேட் நிறுவனங்கள்‘விவசாயிகள் நிலத்தை பறிக்க முடியாது’ அமித்‌ஷா திட்டவட்டம்

கார்ப்பரேட் நிறுவனங்கள்‘விவசாயிகள் நிலத்தை பறிக்க முடியாது என உள்துறை அமைச்சர் அமித்‌ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Update: 2020-12-26 00:58 GMT
புதுடெல்லி, 

புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் சிக்க வேண்டியது வரும், தங்களது நிலத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் பறித்துக்கொண்டு விடும் என்ற அச்சம் விவசாயிகளிடம் உள்ளது.

இதுவும் விவசாயிகள் போராட்டத்துக்கு முக்கிய காரணம் ஆகி உள்ளது. ஆனால் டெல்லியையொட்டி உள்ள கி‌ஷான்கார் கிராமத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி அமித்‌ஷா கலந்து கொண்டு பேசுகையில் இதுபற்றி ஒரு உத்தரவாதத்தை அளித்தார்.

அப்போது அவர், ‘‘இந்த நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இருக்கிறவரையில், எந்தவொரு கார்ப்பரேட் நிறுவனமும் விவசாயிகளின் நிலத்தை பறிக்க முடியாது’’ என திட்டவட்டமாக கூறினார்.

மேலும் செய்திகள்