இந்துக்கள் தேசபக்தி மிக்கவர்கள்: ஆர்.எஸ். எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு

இந்துவாக இருப்பவர் இந்தியாவுக்கு எதிராக இருக்க முடியாது என்று மோகன் பகவத் கூறினார்.

Update: 2021-01-02 05:59 GMT
புதுடெல்லி,

ஒருவர் இந்து என்றால் அவருக்கு தேசப்பற்றை சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை தானாகவே இயல்பாகவே தேசப்பற்று இந்துக்களிடத்தில் இருக்கிறது. நாட்டுப்பற்று இந்துக்க்களின் அடிப்படை இயல்பு, குணாம்சம் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

புத்தக  வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மோகன் பகவத் மேலும் கூறுகையில்,  இந்துக்கள் நாட்டுப்பற்று உடையவர்களாகவே இருக்க முடியும், இருக்க வேண்டும். இதுதான் இந்துக்களின் அடிப்படை குணாம்சம் அல்லது இயல்பு.  

இந்துவாக இருப்பவன் இந்தியாவுக்கு எதிராக இருக்க முடியாது. இந்து மதம் ஒற்றுமையை வலியுறுத்துகிறது. வித்தியாசம், வேறுபாடு என்பது பிரிவினை அல்ல. இந்து மதம் மதங்களுக்கெல்லாம் மதம் என காந்திஜி கூறினார்” இவ்வாறு கூறினார். 

மேலும் செய்திகள்