ரெயில்வேக்கு சரக்கு போக்குவரத்து மூலம் கடந்த டிசம்பரில் ரூ.12 ஆயிரம் கோடி வருவாய்

ரெயில்வே துறைக்கு சரக்கு போக்குவரத்து மூலம் கடந்த டிசம்பர் மாதத்தில் ரூ.12 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்து உள்ளது.

Update: 2021-01-02 23:08 GMT

புதுடெல்லி,

கொரோனா பரவல் காலக்கட்டத்தில் பயணிகள் ரெயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் சரக்கு ரெயில்கள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன. கடந்த டிசம்பர் மாதம் மொத்தம் 11 கோடியே 81 லட்சத்து 30 ஆயிரம் டன் எடையிலான நிலக்கரி, இரும்புத்தாது, உணவு தானியங்கள், சிமெண்டு உள்ளிட்ட சரக்குகள் ரெயிலில் கொண்டு செல்லப்பட்டு உள்ளன. இதன் மூலம் ரெயில்வேக்கு ரூ.11 ஆயிரத்து 788 கோடியே 11 லட்சம் வருவாய் கிடைத்து உள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த மாதம் 8.54 சதவீதம் அதிக சரக்குகள் ஏற்றப்பட்டு உள்ளன. சரக்கு ஏற்றுதலில் ரெயில்வேயின் வருவாய் கடந்த ஆண்டைவிட ரூ.757 கோடியே 74 லட்சம் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.  இந்த தகவல்களை ரெயில்வே அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்