உத்தரகாண்டில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.3 ஆக பதிவு

உத்தரகாண்டில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2021-01-08 09:06 GMT
டேராடூன்,

உத்தரகாண்டின் பாகேஷ்வர் பகுதியில் இன்று காலை 10.05 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இதனால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

இது ரிக்டரில் 3.3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்