இன்று 1,91,181 பேருக்கு வெற்றிகரமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது -மத்திய சுகாதார அமைச்சகம்

இன்று 1,91,181 பேருக்கு வெற்றிகரமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது

Update: 2021-01-16 14:47 GMT
படம்: ANI
புதுடெல்லி

இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவிஷில்டு’ என்ற கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது. இந்த தடுப்பூசியை மத்திய அரசு அதிக அளவில் கொள்முதல் செய்து ஒவ்வொரு மாநிலங்களுக்கும் அனுப்பி உள்ளது. நாடு முழுவதும் இந்த தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக இன்று தொடங்கி வைத்தார். முதன் முதலாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுகாதார பணியாளர் மணீஷ் குமாருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்கள். அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்  தொடங்கி வைத்தனர். 

இன்று நாடு முழுவதும் வெற்றிகரமாக கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி பல்வேறு மாநிலங்களில் தாமதமானது. கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்வதற்கான கோவின் செயலியும் சரியாக இயங்கவில்லை.


இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட முதல் அறிக்கையில்
இன்று மற்றும் 1,65,714   பேருக்கு இன்று தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.; தடுப்பூசி; முதல் நாள் வெற்றிகரமாக போடப்பட்டு உள்ளது. தடுப்பூசிக்கு பிறகு  மருத்துவமனையில் யாரும் சேர்ந்ததாக இதுவரை; தெரிவிக்கப்படவில்லை. இது தடுப்பூசியின் முதல் நாள் என்பதால், சில சிக்கல்கள் எழுந்தன; அவற்றிற்கு உடனடியாக; தீர்வு காணப்பட்டது என கூறி இருந்தது.

தற்போது மத்திய  சுகாதார அமைச்சகம்   இன்று 1,91,181   பேருக்கு வெற்றிகரமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்