நாடு முழுவதும் 27 நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் - பிரதமர் மோடி தகவல்

நாடு முழுவதும் 27 நகரங்களில் 1,000 கி.மீட்டருக்கு மேற்பட்ட நீளத்துக்கு மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் நடந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2021-01-19 08:42 GMT
ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டமும், சூரத்தில் மெட்ரோ ரெயில் திட்டமும் மேற்கொள்ளப்படுகிறது. பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் இதற்கு அடிக்கல் நாட்டினார். ஆமதாபாத்தில், 28 கி.மீ. நீள மெட்ரோ ரெயில் பாதை ரூ.5 ஆயிரத்து 384 கோடி செலவிலும், சூரத்தில் 40 கி.மீ. நீள மெட்ரோ ரெயில் பாதை ரூ.12 ஆயிரத்து 20 கோடி செலவிலும் போடப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:-

எனது அரசுக்கும், முந்தைய அரசுகளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், மெட்ரோ ரெயில் திட்டங்கள் விரிவாக்கத்தின் வேகம் ஆகும். நான் பதவிக்கு வந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு நாடு முழுவதும் 225 கி.மீ. நீள மெட்ரோ ரெயில் திட்டம்தான் செயல்பாட்டுக்கு வந்தது. ஆனால், கடந்த 6 ஆண்டுகளில், 450 கி.மீ. நீள பாதை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. தற்போது, நாடு முழுவதும் 27 நகரங்களில் 1,000 கி.மீட்டருக்கு மேற்பட்ட நீளத்துக்கு மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் நடந்து வருகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்