அருணாசல பிரதேசத்தில் அத்துமீறல்: சீனாவுக்கு எதிராக பா.ஜனதா போராட்டம்

சீன அதிபர் ஜின்பிங்கின் உருவ பொம்மைகளைஎரித்து தங்கள் எதிர்ப்பை பாஜகவினர் பதிவு செய்தனர்.

Update: 2021-01-24 21:58 GMT
இடாநகர், 

அருணாசல பிரதேசத்தில் இந்திய பகுதிக்குள் கிராமம் ஒன்றை சீனா அமைப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இது இருநாட்டு உறவில் மீண்டும் புகைச்சலை கிளப்பி இருக்கிறது. சீனாவின் இந்த அத்துமீறலை கண்டித்து அருணாசல பிரதேச பா.ஜனதாவினர் தலைநகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது ‘பாரத் மாதாகி ஜே’, ‘திரும்பிப்போ சீனா’ என்பது போன்ற கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.

மேலும் சீன அதிபர் ஜின்பிங்கின் உருவ பொம்மைகளையும் அவர்கள் எரித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த போராட்டத்தால் தலைநகரில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் குறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் தேச்சி நேச்சா கூறுகையில், ‘அருணாசல பிரதேசம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக எப்போதும் இருந்து வருகிறது. இனியும் அதுவே தொடரும்’ என்று கூறினார்.

மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு, புதிதாக சீனா ஆக்கிரமிப்பு எதிலும் ஈடுபடவில்லை எனக்கூறிய அவர், தற்போது பிரச்சினையில் அடிபடும் பகுதி ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஆக்கிரமித்தது எனவும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்