டாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை

உலக பொருளாதார அமைப்பின் டாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்.

Update: 2021-01-28 00:13 GMT
புதுடெல்லி,

உலக பொருளாதார அமைப்பின் டாவோஸ் மாநாட்டில்  பிரதமர் மோடி இன்று  உரையாற்றுகிறார். காணொலி வாயிலாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி உரை நிகழ்த்த உள்ளார். 

உலகம் முழுவதும் 400 க்கும் அதிகமான மிகப்பெரிய தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நான்காவது தொழில் புரட்சி குறித்து பிரதமர் மோடி பேச உள்ளார். 

மேலும் செய்திகள்