பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த இளவரசி டிஸ்சார்ஜ்

பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த இளவரசி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2021-02-02 11:09 GMT
பெங்களூரு,

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலா உடல் நலக்குறைவால் விக்டோரியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சிறையில் சசிகலா உடன் இருந்த இளவரசிக்கும், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவரது சளி மாதிரியை சிறை மருத்துவ குழுவினர் எடுத்து, பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர், சசிகலாவுடன் தொடர்பில் இருந்த பெண் வார்டன்கள், பாதுகாப்புக்கு வந்த போலீஸ் அதிகாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அவர்களின் பரிசோதனை முடிவு கடந்த 25 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் பெங்களூரு சிறையில் சசிகலா உடன் இருந்த இளவரசிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 2-வது முறையாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா உறுதி செய்யப்பட்ட இளவரசி விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த இளவரசி இன்று டிஸ்சார்ஜ் 
செய்யப்பட்டுள்ளார். 5ஆம் தேதி விடுதலையாக உள்ள நிலையில், மருத்துவமனையில் இருந்து மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

மேலும் செய்திகள்