டெல்லியில் இன்று சாலை மறியல் இல்லை; விவசாயிகள் அறிவிப்பு

நாட்டின் பிற பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும் அறிவிக்கப்பட்டபடி நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும் மறியல் போராட்டம் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2021-02-05 18:58 GMT
புதுடெல்லி, 

சீர்திருத்தம் என்ற பெயரில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களும் தங்களுக்கு எதிரானவை என்ற கருத்து விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது. குறிப்பாக, இந்த சட்டங்கள் தங்களை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கையேந்தி நிற்க வைத்து விடும், 

குறைந்தபட்ச ஆதரவு விலை முறைக்கு வேட்டு வைத்து விடும் என்று கருதி, அவற்றை திரும்பப்பெற வலியுறுத்தி 2 மாதங்களுக்கு மேலாக டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் சாலைகளில் இறங்கி போராடி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு நிற்கின்றன.

இந்த தருணத்தில், விவசாயிகள் 6-ந் தேதி (இன்று) டெல்லியிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் சக்கா ஜாம் என்ற பெயரில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்டபடி மறியல் போராட்டம் இல்லை என்று போராடும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சம்யுக்த் கிசான் மோர்ச்சா நேற்று திடீரென அறிவித்தது, திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதே நேரத்தில் நாட்டின் பிற பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும் அறிவிக்கப்பட்டபடி நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும் மறியல் போராட்டம் நடைபெறும், அதுவும் அமைதியான முறையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 நாட்டின் பிற பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும் அறிவிக்கப்பட்டபடி நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும் மறியல் போராட்டம் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்