ஏர் இந்தியா நஷ்டம் ரூ.10 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என தகவல்

நடப்பு நிதியாண்டில் ஏர் இந்தியா நிறுவனத்தின் நஷ்டம் 10,000 கோடி அளவுக்கு இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2021-02-09 03:58 GMT
புதுடெல்லி,

ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்க முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், நடப்பு நிதியாண்டில் அதன் நஷ்டம்  10,000 கோடி அளவுக்கு இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. 2007-ல்  ஏர் இந்தியா நிறுவனத்துடன் உள்நாட்டு விமான சேவை நிறுவனமான இந்தியன்  ஏர்லைன்ஸ் நிறுவனம் இணைக்கப்பட்டது. அதன் பின்னர் ஏற்பட்ட ஆண்டு வாரியான நஷ்டத்தில் இது தான் மிக அதிகமான தொகையாக உள்ளது என கூறப்படுகிறது. 

கடந்த 2018-ம் நிதி ஆண்டில் ரூ. 5,300 கோடியாக இருந்த நஷ்டம், 2019-ம் நிதி ஆண்டில் ரூ. 8,500 கோடியாக உயர்ந்தது. இந்த நிலையில் 2020-ம் நிதி ஆண்டில் நஷ்டம் ரூ.10 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக ஏர் இந்தியாவின் மொத்த மதிப்பிற்கு பாதிப்புகள் ஏற்பட்டு, அதன் பங்கு  விற்பனை விலை குறைய வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. 

மேலும் செய்திகள்