பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தும் போராட்டக்காரர்களை இழப்பீடு வழங்க செய்ய அரியானா அரசு திட்டம்

பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தும் போராட்டக்காரர்களை இழப்பீடு வழங்க செய்யும் சட்டம் கொண்டு வர அரியானா அரசு திட்டமிட்டு வருகிறது.

Update: 2021-02-13 23:40 GMT
புதுடெல்லி,

அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பில், அரியானாவில் விவசாயிகள் மேற்கொண்டு வரும் தர்ணா போராட்டங்கள் மற்றும் மகா பஞ்சாயத்து கூட்டங்கள் ஆகியவை பற்றி மத்திய மந்திரியிடம் கட்டார் எடுத்து கூறியுள்ளார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கட்டார், கட்சி விவகாரங்கள் பற்றி விவாதித்தோம்.  விவசாயிகளின் போராட்டம் பற்றியும் நாங்கள் பேசினோம்.  அரியானாவில் விவசாயிகள் நடத்திய தர்ணா போராட்டங்கள் மற்றும் மகா பஞ்சாயத்து கூட்டங்கள் ஆகியவை பற்றிய அனைத்து விசயங்களையும் அமித்ஷாவிடம் வழங்கினேன் என கூறினார்.

போராட்டக்காரர்களுக்கு எதிரான சட்டங்கள் பற்றிய கேள்விக்கு பதிலளித்த கட்டார், பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தும் போராட்டக்காரர்களை இழப்பீடு வழங்க செய்யும் சட்டம் கொண்டு வர அரியானா அரசு திட்டமிட்டது.

விவசாயிகளின் போராட்டத்திற்கு முன்பே இந்த சட்டங்களை கொண்டு வருவதற்கு நாங்கள் திட்டமிட்டு இருந்தோம்.  பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்த ஒருவருக்கும் உரிமை இல்லை என சுப்ரீம் கோர்ட்டு முன்பு தனது முடிவில் தெரிவித்து இருந்தது.  அதன்படி, பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தும் போராட்டக்காரர்களை இழப்பீடு வழங்க செய்யும் சட்டம் கொண்டு வந்துள்ளோம் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்