மும்பை தெருவில் இளைஞர் ஒருவர் தயாரிக்கும் பறக்கும் தோசை

மும்பை தெருவில் இளைஞர் ஒருவர் பறக்கும் தோசை தயாரித்து கொடுக்கிறார்

Update: 2021-02-17 16:31 GMT
மும்பை

தோசையில் எத்தனையோ   வகை பார்த்திருப்போம் ஆனால் மும்பை மங்கல்தாஸ் மார்க்கெட்டில் உள்ள ஸ்ரீபாலாஜி கடையில் பறக்கும் தோசை கிட்டைக்கிறது.

ஸ்ட்ரீட் ஃபுட் ரெசிபீஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில் கடந்த வாரம் பகிரப்பட்ட, இந்த பறக்கும் தோசை வீடியோ 8 கோடியே 40 லட்சம் பேரால் கவனம் பெற்றுள்ளது. மேலும் 13 லட்சம் பேர் இந்த வீடியோவிற்கு லைக் போட்டுள்ளனர்.விறுவிறுப்பாக தோசை கல்லில் தோசை சுடும் இளைஞர் நேரடியாக அதனை வாடிக்கையாளரின் தட்டுக்கே வீசுகிறார்.

வாடிக்கையாளர்களை கவருவதற்காக இப்படி செய்தாலும், உணவை பறக்கவிடுவது அவமரியாதை என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.


மேலும் செய்திகள்