பெங்களூருவில் வருகிற 24-ந் தேதி ஜனநாயக மாண்புகள் குறித்த கருத்தரங்கு - சபாநாயகர் காகேரி தகவல்

பெங்களூருவில் வருகிற 24-ந் தேதி ஜனநாயக மாண்புகள் குறித்த கருத்தரங்கு நடைபெறும் என சபாநாயகர் காகேரி தெரிவித்துள்ளார்.

Update: 2021-02-17 23:11 GMT
பெங்களூரு,

கர்நாடக சட்டசபை சபாநாயகர் காகேரி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சமீபகாலமாக ஜனநாயக மாண்புகள் குறைந்து வருகிறது. இதை தடுக்கும் பொருட்டு, ஜனநாயக மாண்புகளை காக்கும் நோக்கத்தில் காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கம் சார்பில் வருகிற 24-ந் தேதி ஜனநாயக மாண்புகள் குறித்த கருத்தரங்கு பெங்களூருவில் காலை 11 மணிக்கு நடக்கிறது. 

இதில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள், முன்னாள் சபாநாயகர்கள், மேல்-சபை தலைவர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் என முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இந்த கூட்டத்தில் வரும் நாட்களில் எந்தெந்த பிரச்சினைகள் குறித்து எவ்வாறு விவாதிக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்படும். இதில் கூறப்படும் அனைவரின் கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்படும். 

இதனால் புதிதாக சட்டசபைக்கு வந்துள்ள உறுப்பினர்களுக்கு பேச அதிக வாய்ப்பு கிடைக்கும். சட்டசபையில் அர்த்தப்பூர்வமாக விவாதங்கள் நடைபெற வேண்டும். ஆனால் சில நேரங்களில் தர்ணா, கூச்சல், குழப்பத்தால் சபை ஒத்திவைக்கப்படுகிறது.

இவ்வாறு காகேரி கூறினார்.

மேலும் செய்திகள்