கிரண்பேடி பிரிவை தாங்க முடியாத கண்ணீர் சிந்திய புதுச்சேரி கிழக்கு எஸ்.பி. ரட்சன சிங்

கிரண்பேடி பிரிவை தாங்க முடியாத புதுச்சேரி கிழக்கு எஸ்.பி. ரட்சன சிங் கண்ணீர் சிந்திய சம்பவம் நடந்துள்ளது.

Update: 2021-02-20 03:17 GMT
புதுவை,

புதுவை மாநில வளர்ச்சிக்கு கவர்னராக இருந்த கிரண்பெடி தடையாக இருப்பதாகவும், அரசு திட்டங்களை முடக்குவதாகவும் ஆளும் காங்கிரஸ் கட்சியினர் புகார் தெரிவித்து வந்தனர்.

இதையொட்டி அவரை திரும்ப பெறக் கோரி தர்ணா, உண்ணாவிரதம், கையெழுத்து இயக்கம் என பல்வேறு போராட்டங்களில் காங்கிரஸ் ஈடுபட்டது. கவர்னரை கண்டித்து கடந்த (ஜனவரி) மாதம் அடுத்தடுத்து போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

இதையடுத்து கவர்னர் மாளிகையை சுற்றிலும், அரசு அலுவலகங்கள் முன்பும் போராட்டங்கள் நடத்த அனுமதி மறுத்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கவர்னர் மாளிகையை சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டன. துணை ராணுவமும் வரவழைக்கப்பட்டது.

இதனால் கடற்கரை, அரசு அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கவர்னர் பொறுப்பில் இருந்து கிரண்பெடி நீக்கப்பட்டார்.

புதிய கவர்னராக தெலுங்கானா மாநில கவர்னர் தமிழசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி பிரிவை தாங்க முடியாமல் புதுச்சேரி கிழக்கு எஸ்.பி. ரட்சனா சிங் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் சக ஊழியர்களிடையே கண்ணீரை வர வழைத்தது.

மேலும் செய்திகள்