அரசியலுக்காக கலாச்சாரத்தை அவமதிப்பவர்களை மேற்கு வங்காள மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் -பிரதமர் மோடி

வாக்கு வங்கி அரசியலுக்காக தங்கள் கலாச்சாரத்தை அவமதிப்பவர்களை வங்க மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என பிரதமர் மோடி கூறினார்.

Update: 2021-02-22 14:13 GMT
Image courtesy : indianexpress
ஹூக்ளி

மேற்கு வங்காளத்தின்  ஹூக்ளியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பல ரெயில் திட்டங்களை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா ஒரு புதிய அரசை அமைக்கும். அதில் மதமும், திறமையும்  மதிக்கப்படும், எல்லோரும் வளர்ச்சியை அனுபவிக்க முடியும்.மேற்கு வங்காளத்தில் பாஜக அரசாங்கத்தை அமைப்பது வெறுமனே அதிகார மாற்றத்திற்காக அல்ல, மாறாக உண்மையான மாற்றத்திற்காக."நமது  இளைஞர்கள் இந்த 'உண்மைஅயான் மாற்றம் ஏற்படும் என்ற  நம்பிக்கையுடன் வாழ்கின்றனர், இதனால் நாங்கள் வங்காளத்தில் பாஜக அரசாங்கத்தை உருவாக்க வேண்டும்,

ஆம்பானுக்குப் பிறகு நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசு ரூ.  1,700 கோடியை வங்காளத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது. மாநில அரசு மட்டுமே செலவிட்டுள்ளது ரூ. 609 கோடி. மீதமுள்ள ₹ 1,100 கோடி  மத்திய அரசு கொடுத்தது.

"வங்காளத்தில் லட்சக்கணக்கான ஏழை மக்கள் ஆயுஷ்மான் பாரதத்தின் கீழ் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள இலவச சிகிச்சையைப் பெற முடியவில்லை. வங்காள மக்களுக்கும் அபிவிருத்திக்கும் இடையில் மம்தா ஜியின் அரசாங்கம் உருவாக்கியுள்ள இடையூறு இதுதான்".

வங்காள மக்களை துர்கா பூஜை மற்றும் விசர்ஜன் செய்வதைத் தடுக்கிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக தங்கள் கலாச்சாரத்தை அவமதிப்பவர்களை வங்க மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

மம்தா தலைமையிலான அரசாங்கம் வங்காளத்தின் வளர்ச்சிக்கு முன்னால் ஒரு சுவராக உள்ளது. விவசாயிகளுக்கும் ஏழைகளுக்கும் மத்திய அரசு டெபாசிட் செய்த பணம் இந்த மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செல்கிறது .

சிறந்த உள்கட்டமைப்பு, விவசாயம், தொழில், சுற்றுலா - வேலை வாய்ப்புகளுக்கு நிறைய சரியான சீர்திருத்தங்கள் தேவை. இணைப்புடன் தொடர்புடைய உள்கட்டமைப்பு எங்கள் அரசாங்கத்தின் முன்னுரிமை. கடந்த சில ஆண்டுகளில், நாங்கள் நெடுஞ்சாலையில் கவனம் செலுத்தினோம், நீர்வழி, காற்றுப்பாதை மற்றும் மின் வழி பாதிகளை அமைத்து உள்ளோம்.

நாட்டின் தன்னம்பிக்கைக்கு மேற்கு வங்கம் ஒரு முக்கிய மையமாக திகழ்கிறது. இங்கிருந்து வடகிழக்கு மற்றும் அண்டை நாடுகளுடன் வர்த்தகம் மற்றும் வணிகத்திற்கான மிகப்பெரிய சாத்தியங்கள் உள்ளன. இதை மனதில் வைத்து, ரெயில்வே கட்டமைப்பை  வலுப்படுத்த கடந்த சில ஆண்டுகளில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கூறினார்.

மேலும் செய்திகள்