3 மாநிலங்களில் இரண்டு புதியவகை கொரோனா: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

இரண்டு புதிய வகை கொரோனா தெலுங்கானா, மராட்டியத்தில் கண்டறியப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

Update: 2021-02-23 15:56 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக சரிவை சந்தித்தாலும் இரண்டு புதிய வகை கொரோனா தெலுங்கானா, மராட்டியத்தில் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே. பால் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறுகையில், “ மராட்டியத்தில் என்440கே மற்றும் இ484கே என இரண்டு வகைகள் இருப்பது பற்றி பேசப்பட்டு வருகிறது.  மராட்டியம்,  கேரளம் மற்றும் தெலங்கானாவில் இந்த வகை கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  எனினும், மராட்டியம் மற்றும் கேரளத்தின் சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரிப்பதற்கு இந்த வகைகள் கொரோனாதான்  காரணம்  என உறுதியாக கூற முடியாது”என்றார்.

மேலும் செய்திகள்