மராட்டிய மாநிலத்தில் ஊழல் மலிந்து காணப்படுவதாக தேவேந்திர பட்னாவிஸ் குற்றச்சாட்டு

மராட்டிய மாநிலத்தில் ஊழல் மலிந்து காணப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2021-02-26 02:06 GMT
மும்பை,

மராட்டிய சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 1-ந் தேதி தொடங்குகிறது. இந்தநிலையில் எத்தனை நாட்கள் கூட்டத்தை நடத்துவது, பட்ஜெட் எப்போது தாக்கல் செய்வது என்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்க நேற்று சட்டசபை அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் வெளிநடப்பு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாநிலத்தில் ஊழல் மலிந்து காணப்படுகிறது. அதை அரசு மூடி மறைக்க பார்க்கிறது. எந்த கேள்விக்கும் பதிலளிக்க அரசு விரும்பவில்லை. இதனால் கொரோனா பரவலை காரணம் காட்டி பட்ஜெட் கூட்டத்தொடர் நாட்களை குறைக்க அரசு முயற்சி செய்கிறது. எனவே நான் அலுவல் ஆய்வு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்