மணிப்பூரில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவு

மணிப்பூரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவாகியுள்ளது.

Update: 2021-03-01 15:49 GMT
மணிப்பூர்,

மணிப்பூரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூருக்கு மேற்கே 66 கி.மீ தொலைவில் இன்று இரவு 8.07  மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது .இந்த நிலநடுகம் ரிக்டர் அளவு கோலில் 3.7-ஆக பதிவாகியுள்ளது.

இதனை இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் மற்றும் பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்