டெல்லி, ஆந்திரா, கர்நாடகாவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

டெல்லி, ஆந்திரா, கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு இன்றைய நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2021-03-06 16:31 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

டெல்லி, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தோர், குணமடைந்தவர்களின் இன்றைய நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி ஆந்திர மாநிலத்தில் இன்று புதிதாக 115 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,90,556 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 921 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 93 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை 8,82,462 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை 7,173 பேர் பலியாகி உள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் இன்று புதிதாக 580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் மேலும் 5 பேர் பலியாகினர். இதன்மூலம் பலியானோர் எண்ணிக்கை 12,359 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகத்தில் இதுவரை மொத்தம் 9,54,393 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9,35,421 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு தற்போது 6,594 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லி மாநிலத்தில் இன்று புதிதாக 321 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 6,40,815 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று ஒருவர் பலியானார். இதன்மூலம் பலியானோர் மொத்த எண்ணிக்கை 10,919 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 320 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை மொத்தமாக 6,28,117 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு தற்போது 1,779 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்