கர்நாடகாவில் வேளாண் விஞ்ஞானி மறைவு; முதல் மந்திரி இரங்கல்

கர்நாடகாவில் வேளாண் விஞ்ஞானி மற்றும் பத்ம பூஷண் விருது பெற்ற எம். மகாதேவப்பா காலமானார்.

Update: 2021-03-06 23:22 GMT
பெங்களூரு,

கர்நாடகாவில் கலப்பின அரிசியின் தந்தை என அழைக்கப்படும் பிரபல விஞ்ஞானி எம். மகாதேவப்பா.  இவர் நேற்று (சனிக்கிழமை) காலமானார்.

அவரது மறைவுக்கு முதல் மந்திரி எடியூரப்பா இரங்கல் தெரிவித்து உள்ளார்.  இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், வேளாண் அறிவியல் துறையில் சிறந்து விளங்கிய மகாதேவப்பா, அவரது சேவை மனப்பான்மைக்காக ஈர்க்கப்பட்டவர்.

அவரது மறைவால் நாம் ஒரு சிறந்த வேளாண் விஞ்ஞானியை இழந்து உள்ளோம் என தெரிவித்து உள்ளார்.

கர்நாடகாவின் சாமராஜநகர் மாவட்டத்தில் மாடப்புரா பகுதியில் பிறந்தவர் மகாதேவப்பா.  மைசூரு நகரில் உள்ள மத்திய உணவு தொழில்நுட்ப ஆய்வு மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளராக தனது பணியை அவர் தொடங்கினார்.

அதன்பின்பு அதிக விளைச்சலை தரக்கூடிய கலப்பின அரிசி வகையை உருவாக்குவதில் அவர் வெற்றி கண்டார்.  வேளாண் அறிவியல் பல்கலை கழகத்தின் துணை வேந்தராக 2 முறை பதவி வகித்தவர்.  வேளாண் விஞ்ஞானிகள் பணியாளர் வாரிய தலைவராகவும் அவர் இருந்துள்ளார்.

மேலும் செய்திகள்