லட்சத்தீவு அருகே போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட 3 இலங்கை படகுகள் பறிமுதல்

லட்சத்தீவு அருகே போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட 3 இலங்கை படகுகளை இந்திய கடலோர காவல் படை பறிமுதல் செய்துள்ளது.

Update: 2021-03-07 23:13 GMT
திருவனந்தபுரம்,

லட்சத்தீவு அருகே இந்திய எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில், சந்தேகத்திற்குரிய வகையிலான 3 படகுகளை இந்திய கடலோர காவல் படை கப்பல் தடுத்து நிறுத்தியது.  அவற்றில் அங்கீகரிக்கப்படாத தொலைதொடர்பு சாதனம் மற்றும் போதை பொருள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஆகர்ஷா துவா, சாது ராணி 3 ஆகிய இரண்டு படகுகளில் தலா 6 பேரும், சாது ராணி 8 படகில் 7 பேரும் இருந்தனர்.  இதன்பின்பு விழிஞ்சம் துறைமுகத்திற்கு படகுகள் கொண்டு செல்லப்பட்டன.

இதுபற்றி அனைத்து பாதுகாப்பு முகமைகளும் கூட்டாக விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.  இதில் ஆகர்ஷா துவா படகில் இருந்து போதை பொருளை பறிமுதல் செய்தனர்.  அதில், பாகிஸ்தானிய படகில் இருந்து கடத்தி வரப்பட்ட 200 கிலோ ஹெராயின் என்ற போதை பொருள் மற்றும் 60 கிலோ எடை கொண்ட ஹாஷிஷ் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இந்திய கடலோர காவல் படையை கண்டதும் அவை கடலுக்குள் தூக்கி வீசப்பட்டு உள்ளன.  தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்