மராட்டியத்தில் புதிதாக 17 ஆயிரத்து 864 பேருக்கு கொரோனா பாதிப்பு

மராட்டியத்தில் புதிதாக 17 ஆயிரத்து 864 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 87 பேர் பலியானார்கள்.

Update: 2021-03-16 23:05 GMT

17,864 பேர் பாதிப்பு

மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவிவருகிறது. எனவே வைரஸ் பரவலை கட்டுபடுத்த ஓட்டல், தியேட்டர்களுக்கு கட்டுpபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாக்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று மாநிலத்தில் புதிதாக 17 ஆயிரத்து 864 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை நாள் தோறும் ஆயிரம், ஆயிரமாக எகிறி வருகிறது.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்து 47 ஆயிரத்து 328 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 21 லட்சத்து 54 ஆயிரத்து 253 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 38 ஆயிரத்து 813 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் மேலும் 87 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இது 52 ஆயிரத்து 996 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மும்பை

தலைநகர் மும்பையில் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று நகரில் புதிதாக 1,923 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 47 ஆயிரத்து 581 ஆகி உள்ளது.

இதேபோல மேலும் 4 பேர் பலியானதால் வைரஸ் நோய்க்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 539 ஆக அதிகரித்து உள்ளது. நகரில் நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 156 நாட்களாக குறைந்து உள்ளது.

மேலும் செய்திகள்