கடந்த 2 ஆண்டுகளில் வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் 1045 ஊடுருவல் சம்பவங்கள் - உள்துறை அமைச்சகம் தகவல்

கடந்த 2 ஆண்டுகளில் வங்காளதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் 1,045 ஊடுருவல் சம்வங்கள் அரங்கேறி உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-03-17 10:56 GMT
புதுடெல்லி,

அண்டை நாடுகளில் இருந்து கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவுக்குள் எத்தனை ஊடுருவல் சம்வங்கள் நடைபெற்றுள்ளது என்ற தகவலை அளிக்கும்படி மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு, மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில் இருந்து எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளது. அதன்படி, கடந்த 2 ஆண்டுகள் மற்றும் ஜனவரி 2021 நிலவரப்படி,

இந்தியாவுக்குள் பாகிஸ்தான் எல்லை வழியாக 61 ஊடுருவல்கள், வங்காளதேச எல்லை வழியாக இருந்து 1,045 ஊடுருவல்கள், நேபாள எல்லை வழியாக 63 ஊடுருவல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

அதேவேளை, பூட்டான், மியான்மர், சீனாவில் இருந்து இந்தியாவுக்குள் எந்த ஊடுருவல் சம்பவங்களும் நடைபெறவில்லை என தெரிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்