கேரளாவில் சட்டசபை தேர்தல்; முதல் மந்திரி பினராயி விஜயன் கண்ணூரில் பிரசாரம்

கேரளாவில் சட்டசபை தேர்தலையொட்டி முதல் மந்திரி பினராயி விஜயன் கண்ணூரில் பிரசாரம் மேற்கொண்டார்.

Update: 2021-04-02 23:26 GMT
திருவனந்தபுரம்,

வருகிற ஜூன் 1ந்தேதியுடன் 14வது கேரள சட்டசபைக்கான பதவி காலம் நிறைவடைகிறது.  15வது சட்டசபைக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் 6ந்தேதி ஒரே கட்டத்தில் நடைபெற உள்ளது.  14 மாவட்டங்களை கொண்ட 140 உறுப்பினர்களை உள்ளடக்கிய சட்டசபைக்கான தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெறும்.

இந்த தேர்தலில் 2 கோடியே 67 லட்சத்து 88 ஆயிரத்து 268 வாக்காளர்கள் ஓட்டு பதிவு செய்து வேட்பாளர்களை தேர்வு செய்கின்றனர்.  இதனை முன்னிட்டு ஆளும் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.

அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களுக்காக தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.  இதேபோன்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கண்ணூரில் மக்களை சந்தித்து, பிரசாரம் மேற்கொண்டு வாக்குகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.  அவரை அந்த பகுதியை சேர்ந்த மக்கள் வரவேற்றனர்.  சிறுவர்கள் பூங்கொத்துகளை காண்பித்தும், பலூன்களை ஏந்தியபடியும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும் செய்திகள்