கொரோனாவுக்கு ஊரடங்கு தீர்வு அல்ல: டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா

கொரோனாவுக்கு ஊரடங்கு தீர்வு அல்ல என்று டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

Update: 2021-04-05 07:12 GMT
புதுடெல்லி,

டெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா கூறியதாவது: - கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு தீர்வல்ல, தடுப்பு மருந்துகளே தீர்வு. நாம் கொரோனா வைரஸ் பரவும் சங்கிலி தொடர்பை தடுக்க வேண்டும். இது மட்டுமே ஒரே தீர்வு.எனவே கொரோனாவுக்கு ஊரடங்கு தீர்வல்ல, தடுப்பு மருந்துகளே தீர்வு.

45 வயதுக்கு மேலான அனைவருக்கு கொரோனா தடுப்பு மருந்தை செலுத்த அனுமதி அளித்ததுபோல, அனைத்து வயதினருக்கும் கொரோனா தடுப்பு மருந்தை செலுத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். மத்திய அரசு அனுமதித்தால் விரைவில் நாங்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணியை தொடங்குவோம்” என்றார். 

மேலும் செய்திகள்