அசாமில் மீண்டும் நிலநடுக்கம்; ரிக்டரில் 2.7 ஆக பதிவு

அசாமில் இன்று காலை திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2021-04-06 00:12 GMT
தின்சுகியா,

அசாமின் தின்சுகியா பகுதியருகே இன்று காலை 3.42 மணியளவில் திடீரென லேசான நிலடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

இது ரிக்டரில் 2.7 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இந்நிலநடுக்கம் அசாமின் பல்வேறு பகுதிகளிலும் உணரப்பட்டு உள்ளன.

சிக்கிம்-நேபாள எல்லை பகுதியருகே நேற்று இரவு 8.49 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.  அது ரிக்டரில் 5.4 ஆக பதிவாகி இருந்தது.  இதுபற்றி பிரதமர் மோடி நிலைமையை ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில், அசாமில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்