கொரோனா தடுப்பூசி யாருக்கு தேவையோ அவர்களுக்கு மட்டுமே போடப்படும் -சுகாதார அமைச்சகம் விளக்கம்

கொரோனா தடுப்பூசி யாருக்கு தேவையோ அவர்களுக்கு மட்டுமே போடப்படும் என்பதுடன் யார் யாருக்கு விருப்பம் இருக்கிறது என்பதற்காக போடப்பட மாட்டாது என சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

Update: 2021-04-07 06:01 GMT
படம்: ANI
புதுடெல்லி

தற்போது, ​​45 வயதிற்கு மேற்பட்டவர்கள், மற்றும் சுகாதார மற்றும் முன்னணி ஊழியர்கள் மட்டுமே தடுப்பூசி பெற தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள். 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடவேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சில் பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்து கடிதம் எழுதி உள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் ஆனைவருக்கும் ஏன் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கவில்லை என அரசை நோக்கி பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு சுகாதார அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷண் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும் போது  கொரோனா மரணங்களை தடுக்க வேண்டும், சுகாதாரம் மற்றும் மருத்துவ பணியாளர்களை காப்பாற்ற வேண்டும் என்ற இரண்டு நோக்கங்களுக்காக மட்டுமே தற்போது தடுப்பூசி போடப்படுகிறது. மக்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக அனைவருக்கும் தடுப்பூசியை போட முடியாது. யாருக்கு தேவையோ அவர்களுக்கு மட்டுமே போடப்படும்  என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்