கோர்ட்டு அவமதிப்பு எதிரொலி ஆதரவற்றோர் இல்லத்தில் தங்க கலெக்டருக்கு உத்தரவு தெலுங்கானா கோர்ட்டு நூதன தண்டனை

தெலுங்கானா மாநில ஐகோர்ட்டு, வழக்கு ஒன்றில் நல்கொண்டா மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட வழங்கல் அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

Update: 2021-04-08 21:07 GMT
ஐதராபாத், 

தெலுங்கானா மாநில ஐகோர்ட்டு, வழக்கு ஒன்றில் நல்கொண்டா மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட வழங்கல் அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் அவர்கள் கோர்ட்டு உத்தரவை ஏற்று செயல்படவில்லை. இதனால், அவர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு குற்றம் பாய்ந்தது. இதையடுத்து, தெலுங்கானா ஐகோர்ட்டு, அவர்களுக்கு நூதன தண்டனை வழங்கி உத்தரவிட்டது.

கோர்ட்டை அவமதித்த குற்றத்திற்காக, நல்கொண்டா மாவட்ட கலெக்டர் பிரசாந்த் ஜே.பாட்டில், 6 மாதங்களுக்கு வார இறுதி நாட்களில் 2 மணி நேரம் ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியிருக்க வேண்டும். அதே போல மாவட்ட வழங்கல் அதிகாரி சந்தியா ராணி, அவரது வீட்டிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்திற்குள் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் அனை வருக்கும் 2 நாளைக்கு உணவு வழங்க உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்