தேவேந்திர குல வேளாளர் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

தமிழகத்தில் உள்ள 7 பட்டியலின உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என்ற பொதுப்பெயரில் அழைப்பதற்கான மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்தது.

Update: 2021-04-13 19:58 GMT

தமிழகத்தில் உள்ள குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் ஆகிய 7 பட்டியலின உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என்ற பொதுப்பெயரில் அழைப்பதற்கான மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்தது.

இந்த மசோதா மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஒப்புதலுக்காக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே தேவேந்திரகுல வேளாளர் மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டு சட்டமாகியுள்ளது.

 

மேலும் செய்திகள்